கர்நாடகாவில் ரூ.8,000 கோடி முதலீடு விப்ரோ ஹெல்த் கேர் நிறுவனம் அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகா சுகாதார துறையில் மேலும் 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய, விப்ரோ ஹெல்த்கேர் திட்டமிட்டு உள்ளதாக, அந்த நிறுவனத்தின் தெற்காசிய பிரிவு தலைவர் சைதன்யா சரவதே கூறினார்.பெங்களூரில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2வது நாளான நேற்று, விப்ரோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவு தலைவர் சைதன்யா சரவதே பேசியதாவது:பெங்களூரின் ஒயிட்பீட்டில் 1 கி.மீ., துாரத்தில் விப்ரோ ஹெல்த்கேருக்கு நான்கு உற்பத்தி ஆலைகள் உள்ளன. அங்கு 30 க்கும் மேற்பட்ட மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. விப்ரோ 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை கொண்டு உள்ளது. சமூகத்தின் கடனை திருப்பி செலுத்த வேண்டிய தார்மீக பொறுப்பை உணர்ந்து எங்கள் நிறுவனம், பல அரசு திட்டங்களில் பங்கேற்று உள்ளது. ராய்ச்சூர் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.* வர்த்தகம் கர்நாடகா சுகாதார துறையில் மேலும் 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். இதுவரை விப்ரோ ஹெல்த்கேர் 300 மில்லியன் நோயாளிகளுக்கு தனது சேவையை வழங்கி உள்ளது. தேவை, திறன் மற்றும் மக்கள் தொகை கர்நாடகா மற்றும் இந்தியாவின் பலங்கள் ஆகும். குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்க்கும் கலாசாரத்தை பெங்களூரு கொண்டு உள்ளது. இதன்காரணமாக ஆப்பிரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி வர்த்தகம் மிக பெரியதாகி விட்டது.இவ்வாறு அவர் பேசினார்.* பெலகாவி ஆக்சஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் மெல்லிகேரி பேசியதாவது:நாட்டின் விண்வெளி துறையின் மையமாக பெலகாவி உருவெடுத்து உள்ளது. இந்த துறையின் 70 சதவீத உதிரி பாகங்களை பெலகாவி வழங்குகிறது. இவற்றின் தரம், எந்த மேற்கத்திய நாட்டிலும் தயாரிக்கப்படும் சாதனங்களை விட குறைந்தது இல்லை.உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்தினால், இந்த உலகமே பெலகாவியை திரும்பி பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் நாடு நிறைய முன்னேற்றம் அடைந்து உள்ளது. இரண்டாம் நிலை நகரங்கள் கூட விமான இணைப்பை கொண்டு உள்ளன. நமது செலவுகள் சீனாவை விட மூன்றில் ஒரு பங்கு குறைவு.இவ்வாறு அவர் பேசினார்.டர்போ ஸ்டார்ட் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட்ராஜு பேசுகையில், ''தொழில்நுட்பம், ஐ.டி., சார்ந்த சேவை துறைகள், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உயிரி தொழில்நுட்ப துறைகளுக்கு பெங்களூரு பெயர் பெற்று உள்ளது. அந்தந்த பிராந்தியங்களின் வள ஆற்றலுக்கு ஏற்ப இரண்டாம் நிலை நகரங்களிலும் முதலீடு ஊக்குவிக்கப்பட்டால் முன்னேற்றம் சாத்தியமாகும்.''வெளிப்படைதன்மை, நிலைத்தன்மை, தொடர்ச்சியான சூழல் உருவாக்கப்பட்டால் தொழில்முனைவோர் நிச்சயம் முதலீடு செய்ய வருவர். உலகளாவிய திறன் மையங்களை நிறுவுவதை வலியுறுத்துவதன் மூலம், மாநில அரசு நல்ல வேலை செய்து உள்ளது. உற்பத்தி துறைக்கும், விநியோக சங்கிலிக்கும் இடையில் ஒரு சமநிலை வேண்டும்,'' என்றார்.===========புல் அவுட்பெரிய சந்தை நாட்டின் முன்னேற்றத்திற்கும், பெங்களூரை உலகளாவிய பெயராக மாற்றுவதிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய பங்கு வகித்து உள்ளது. எங்களிடம் தற்போது 1700 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இந்தியா ஒரு பெரிய சந்தையாக இருப்பதால், இது சாத்தியமானது. இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துறையில் மிக பெரிய வாய்ப்புகள் உள்ளன.மோகித் கோச்சார், தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி, கே.பி.ஐ.டி., டெக்னாலஜிஸ்.=========திறன் அதிகரிப்புநிலையான வளர்ச்சி என்ற கருத்து உலகளவில் முன்னணியில் உள்ளது. பசுமை எரிசக்தி துறையில் கர்நாடகா முதலீட்டை வலியுறுத்தி உள்ளது. ஏற்கனவே ஆனந்த் மஹிந்திரா, சஜ்ஜன் ஜிண்டால் போன்ற தொழில் அதிபர்கள் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் துறைகளில் ஆயிரக்கணக்கான கோடி முதலீடு செய்து உள்ளனர். புதுப்பித்தக்க ஆற்றலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமிக்க பேட்டரி உள்கட்டமைப்பின் திறனை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் சமநிலை அடைய முடியும்.பிரியதர்ஷி பாண்டா, தலைமை நிர்வாக அதிகாரி, சர்வதேச பேட்டரி நிறுவனம். ==============ரூ.1,000 கோடி ஸ்டார்ட் அப் இந்தியா, ஜி.எஸ்.டி., போன்ற நடவடிக்கைகள் உற்பத்தி துறைக்கு பெரும் பலத்தை கொண்டு வந்து உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து உற்பத்தி துறையை ஊக்குவித்து வருகின்றன. கர்நாடகா தொழில் துறைக்கு உகந்த மாநிலம். பெங்களூரு மற்றும் மைசூரில் எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் விரிவடைந்து வருகிறது. நாங்கள் இங்கு பல பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து பெண்களுக்கு திறன்களை வழங்கி வருகிறோம். தற்போது 1,000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய உள்ளோம்.வேணு, நிர்வாக இயக்குனர், ஹிட்டாச்சி எனர்ஜி.===========மாறும் நேரம் எங்கள் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. நாங்கள் 72 ஆண்டுக்கு முன்பு உள்ளுர் உற்பத்தியை துவங்கினோம். இப்போது நாடு முழுதும் 17 உற்பத்தி அலகுகளை கொண்டு உள்ளோம். எங்கள் உற்பத்தியில் 90 சதவீதம் உள்ளுர் உற்பத்தியாகும். கர்நாடகாவும், இந்தியாவும் சேவை சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து, உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்திற்கு மாறும் நேரம் வந்து விட்டது.குருபிரசாத் முதலாபூர்,தலைமை நிர்வாக அதிகாரி, போஷ்.