மதுவில் விஷம் கலந்து குடித்து பெண் தற்கொலை
முல்பாகல்: முல்பாகலின் சிக்கனஹள்ளியை சேர்ந்தவர் சகுந்தலா, 40. இவருக்கு கணவரும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. குடும்பத்தினருக்கு மேலும் தொல்லையாக இருக்க வேண்டாம் என முடிவெடுத்தவர், மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, ஜெயின் பள்ளி வளாகத்தில் படுத்துள்ளார். துாக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. தகவலறிந்து வந்த முல்பாகல் போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.