மேலும் செய்திகள்
குழந்தையுடன் தாய் மாயம போலீஸ் விசாரணை
19-Sep-2026
ராய்ச்சூர்: ஒன்றரை வயது மகள் கண் முன், தாய் கொல்லப்பட்ட வழக்கில், குழந்தையின் தந்தை நண்பர் கைது செய்யப்பட்டார். ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனுார் தாலுகாவில் ஆர்.எச்.கேம்ப் 5 கிராமத்தை சேர்ந்த வர் சிநேகா, 26. இவருக்கும், அமித்துக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகிறது. ஒன்றரை வயதில் மகள் உள்ளார். கணவருடன் தகராறு ஏற்பட்டதால், பெற்றோ ர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 19 ம் தேதி காலை வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் தலையில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவர் மீது ஒன்றரை வயது மகள், உறங்கிக் கொண்டிருந்தார். இதை கவனித்த கிராமத்தினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்தார். சிந்துனுார் கிராமப்புற போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிநேகாவின் சகோதரர் அளித்த புகாரின் படி, வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரித்தனர். கணவர் அமித்தின் நண்பர் சுபம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிநேகாவுக்கும், கணவர் அமித்தின் நண்பர் சுபமுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அமித்துக்கும், சிநேகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், பெற்றோர் வீட்டுக்கு சிநேகா சென்றுவிட்டார். சம்பவத்தன்று, சிநேகாவும், சுபமும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. கோபமடைந்த சுபம், சிநேகாவை தாக்கி கொலை செய்தார். சிநேகாவுடன் வந்திருந்த மகளை, அருகிலேயே விட்டு விட்டு தப்பியதாக தெரிவித்து உள்ளார் அதே வேளையில், சிநேகாவின் கணவர் அமித்தையும், போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Sep-2026