உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண் எஸ்.ஐ., ஏட்டு அதிரடி ‘சஸ்பெண்ட்’

பெண் எஸ்.ஐ., ஏட்டு அதிரடி ‘சஸ்பெண்ட்’

கோலார்: கோலாரில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கத் தவறியது மற்றும் மறைமுக ஆதரவு அளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், நங்கிலி பெண் எஸ்.ஐ., உட்பட இருவரை கோலார் எஸ்.பி., பணியிடை நீக்கம் செய்துள்ளார். கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் உள்ள நங்கிலி போலீஸ் எஸ்.ஐ., வித்யாஸ்ரீ, பிரவீன் ஏட்டு ஆகியோர் மணல் கொள்ளைக்கு துணை போவதாக தெரியவந்தது. நங்கிலி தொட்டகெரேயில் தொடர்ந்து நடந்து வந்த சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கையில் கோலார் உதவி எஸ்.பி., மோனிகா சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது ஒரு டிராக்டர், ஒரு ஜேசிபி பறிமுதல் செய்யப்பட்டன. பின், ஏ.எஸ்.பி., மோனிஷா அளித்த அறிக்கையின் அடிப்படையில், ‘எஸ்.ஐ., வித்யாஸ்ரீ, ஏட்டு பிரவீன் ஆகிய இருவரை கோலார் எஸ்.பி., கனிகா சிக்ரிவால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ