உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 3 பிள்ளைகளை தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய பெண்

3 பிள்ளைகளை தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய பெண்

பன்னர்கட்டா: கணவர், மூன்று பிள்ளைகளை தவிக்கவிட்டு, காதலனுடன், பெண் ஓட்டம் பிடித்துள்ளார். தன் மனைவியை ஏமாற்றி அழைத்துச் சென்றதாக, கணவர் கண்ணீர்மல்க புகார் அளித்துள்ளார். பெங்களூரு, பன்னர்கட்டா பசவனபுராவை சேர்ந்தவர் மஞ்சுநாத், 40, இவரது மனைவி லீலாவதி, 37. தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். லீலாவதிக்கும், சந்து, 30, என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. மஞ்சுநாத் வீட்டில் இல்லாத நேரம், லீலாவதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த மாதம் 27ம் தேதி சந்துவுடன், லீலாவதி ஓட்டம் பிடித்தார். மனைவியை மீட்டு தர கோரி, பன்னர்கட்டா போலீசில் மஞ்சுநாத் நேற்று முன்தினம் புகார் செய்தார். 'எனக்கும், லீலாவதிக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் காதல் திருமணம் செய்தோம். அவருக்கு எப்படியோ சந்துவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சந்து நல்லவன் இல்லை. 'பணம், நகைகளை கொடுத்து, என் மனைவியை மயக்கிவிட்டான். ஏதேதோ கூறி என் மனைவியை ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டான். அவனிடம் இருந்து என் மனைவியை மீட்டு தர வேண்டும். நானும், பிள்ளைகளும் பரிதவிக்கிறோம். ' நாங்கள் சாப்பிட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன' என, மஞ்சுநாத் கண்ணீர்மல்க கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை