உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜெலட்டின் வெடித்து தொழிலாளி பலி

ஜெலட்டின் வெடித்து தொழிலாளி பலி

ராம்நகர் : பிடதி அருகில் உள்ள கல் குவாரியில், ஜெலட்டின் வெடித்து சிதறியதில், ஒரு தொழிலாளி உயிரிழந்தார். மூவர் பலத்த காயமடைந்தனர். பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகரின், பிடதி அருகில் உகரஹள்ளி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. நேற்று முன்தினம் மாலை, நான்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மழை பெய்யும் சூழ்நிலை இருந்ததால், வீட்டுக்கு செல்லும் அவசரத்தில், வேகவேகமாக பணிகளை செய்தனர். ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகளை பயன்படுத்தி, பாறைகளை தகர்க்க தயாராகினர். அப்போது இடி தாக்கியதில், தீப்பொறி பட்டு ஜெலட்டின் வெடித்து சிதறியது. அங்கு பணியில் இருந்த, ஜார்க்கண்டை சேர்ந்த கிஷண், 45, என்பவர் உயிரிழந்தார். ஒருவரின் கால் துண்டானது. மற்ற இருவர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த பிடதி போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம், சுற்றுப்புற கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ