| ADDED : நவ 14, 2025 05:11 AM
பெங்களூரு: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக சூப்பர் கபடி லீக் போட்டியின், தொழில்நுட்ப இயக்குநராக கர்நாடகாவின் ரவீந்திர ஷெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். உலக சூப்பர் கபடி லீக் போட்டிகள் முதல்முறையாக அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. உலக சூப்பர் கபடி லீக்கின் தொழில்நுட்ப இயக்குநராக, கர்நாடகாவின் ரவீந்திர ஷெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். திறமையான சர்வதேச கபடி பயிற்சியாளரும், தொழில்நுட்ப தொலைநோக்கு பார்வையாளருமான ரவீந்திர ஷெட்டி, தேசிய, சர்வதேச தளங்களில் விளையாட்டை வடிவமைப்பதில் 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர். கடந்த 2001 - 2019 வரை கர்நாடக கபடி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து உள்ளார். கடந்த 2023ல் ஈரானில் நடந்த ஜூனியர் கபடி உலக கோப்பையில், இந்திய ஜூனியர் அணியை வழிநடத்தினார். தற்போது தாய்லாந்து அணியின் பயிற்சியாளராக உள்ளார். உலக சூப்பர் கபடி லீக் போட்டிகளில், விளையாட்டின் அமைப்பு, நடுவர் மற்றும் பயிற்சியாளர் தேர்வு, விளையாட்டு வடிவங்களின் புதுமைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.