உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விமான நிலைய உணவில் புழு: குற்றச்சாட்டுக்கு நிர்வாகம் மறுப்பு

விமான நிலைய உணவில் புழு: குற்றச்சாட்டுக்கு நிர்வாகம் மறுப்பு

பெங்களூரு: கெம்பேகவுடா விமான நிலையத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறிய பயணியின் குற்றச்சாட்டுக்கு, விமான நிலைய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் ஓய்வறையில் வழங்கப்பட்ட பருப்பு குழம்பில், புழு இருந்ததாக கூறி, ஜெர்மனிக்கு செல்லவிருந்த நம் நாட்டு பயணி நேற்று முன்தினம் படங்கள் வெளியிட்டிருந்தார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இச்சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்து, கெம்பேகவுடா விமான நிலையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: புகார் எழுந்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஓய்வறையின் சமையலறையில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவில் இருந்தது புழு கிடையாது. அது முளைகட்டிய பயிரின் ஒரு பகுதியே. இதை பயணி தவறாக புழு என நினைத்து உள்ளார். பயணியரின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்போம். சமையலறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ