உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  யஷ்வந்த்பூர் - தாளகுப்பா சிறப்பு ரயில் இயக்கம்

 யஷ்வந்த்பூர் - தாளகுப்பா சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரு: மாரிகாம்பா தேவி திருவிழாவை முன்னிட்டு, பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து, ஷிவமொக்கா தாளகுப்பாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகி றது. தென்மேற்கு ரயில்வே கூறி இருப்பதாவது: சாகர் மாரிகாம்பா தேவி திருவிழாவை முன்னிட்டு, பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், யஷ்வந்த்பூர் - தாளகுப்பா இடையே, இன்று மற்றும் 5, 8, 10ம் தேதிகளில் சிறப்பு ரயில் - 06585 இயக்கப்படுகிறது. யஷ்வந்த்பூரில் இரவு 10:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5:05 மணிக்கு தாளகுப்பா செல்லும். தாளகுப்பா - யஷ்வந்த்பூர் இடையில் 4, 6, 9, 11ம் தேதிகளில் சி றப்பு ரயில் - 06586 இயங்கும். தாளகுப்பாவில் காலை 9:30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5:15 மணிக்கு யஷ்வந்த்பூர் வரும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ