மேலும் செய்திகள்
தங்கவயல் ஸ்டேஷனில் போலீசார் உறுதி ஏற்பு
01-Nov-2026
தங்கவயல்: பெண்ணை கொலை செய்து, உடலை பார்சல் போல சாக்குப்பையில் கட்டி சாலையில் வீசியுள்ளனர். தங்கவயல் தாலுகா சுந்தரபாளையா கிராமத்திற்கு அருகே சென்னை- – பெங்களூரு விரைவு நெடுஞ் சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில், ஒரு பார்சல் போல சிறிய மூட்டை காணப்பட்டது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது பற்றி அப் பகுதியினர், பேத்தமங்களா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர். சாக்குப் பையில், 35 – 40 வயதுள்ள பெண்ணின் உடல் இருந்தது. இந்த பெண்ணின் உடலை கட்டி, பிளாஸ்டிக் உறையிட்டு, பிளாஸ்டரால் சுற்றி கட்டி வீசியுள்ளனர். தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத், டி.எஸ்.பி., லட்சுமய்யா, அந்த பெண்ணின் பார்சல் கிடந்த இடத்தை பார்வையிட்டனர்.
01-Nov-2026