உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 216 மணி நேரம் நடனமாடி இளம்பெண் உலக சாதனை

216 மணி நேரம் நடனமாடி இளம்பெண் உலக சாதனை

உடுப்பி: சமீபத்தில் ஏழு நாட்கள் தொடர்ந்து நடனமாடி, மங்களூரின் பரத நாட்டிய கலைஞர் ரெமோனா, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இப்போது மற்றொரு கலைஞர், 216 மணி நேரம் நடனமாடி புதிய சாதனை படைத்துள்ளார். உடுப்பி மாவட்டம், பிரம்மாவராவின் ஆரூரு கிராமத்தை சேர்ந்தவர் விதுஷி தீக்ஷா. இவர் பரத நாட்டிய கலைஞர். இவர் வித்வான் ஸ்ரீதரிடம், நடனம் கற்று வருகிறார். இவருக்கு நடனத்தில் சாதனை செய்ய வேண்டும் என்பது குறிக்கோள். அதன்படி சாதனை செய்துள்ளார். உடுப்பியின் சங்கர் மகளிர் அரசு கல்லுாரி ஆடிட்டோரியத்தில் தொடர்ந்து 216 மணி நேரம் நடனமாடி சாதனை செய்துள்ளார். மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை, 15 நிமிடம் ஓய்வு பெற்று, நடனத்தை தொடர்ந்தார். ஆகஸ்ட் 21ம் தேதி, மதியம் 3:30 மணிக்கு பரத நாட்டியத்தை துவக்கினார். நேற்று முன்தினம் மதியம் 3:30 மணிக்கு நிறைவு செய்தார். 216 மணி நேரம் நடனமாடி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்த சாதனையை, 'கோல்டன் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்டு' நிறுவனத்தின், ஆசிய தலைவர் மனீஷ் விஷ்ணோய் முன்னிலையில் நிகழ்த்தினார். விதுஷி தீக்ஷா சாதனைக்காக, உடுப்பியின், அஜ்ஜரகாடுவின் மகாத்மா காந்தி மைதானத்தில், அவருக்கு பாராட்டு விழா நடந்தது. துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்று, அவரை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ