மேலும் செய்திகள்
சிந்தனைக்களம்: ராணுவ நடவடிக்கை நிறுத்தம் ஏன்?
11-May-2025
மங்களூரு: மங்களூரு அருகே படகுமிஜார் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், 31. மஹாராஷ்டிரா, புனேயில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவரது மனைவி நமிக் ஷா ஷெட்டி, 29. தம்பதிக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்தவரும், மங்களூரு நிடோடியில் வசிப்பவருமான பிரசாந்த், 30, நமிக் ஷா இடையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரசாந்த்துக்கு திருமணம் முடிந்து, மனைவியை பிரிந்து தனியாக வசித்தார்.பிரசாந்த், நமிக் ஷாவுக்கு ஏற்பட்ட பழக்கம், கள்ளத்தொடர்பாக மாறியது. நமிக் ஷா வீட்டிற்கு அடிக்கடி சென்றார். நேற்று முன்தினம் மாலையில், கள்ளக்காதல் ஜோடிக்கு இடையில், ஏதோ காரணத்துக்காக தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பிரசாந்த், நமிக் ஷாவை பிடித்து கிணற்றில் தள்ளினார்.பின், அதே கிணற்றில் குதித்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. மூடபித்ரி போலீசார் விசாரிக்கின்றனர்.
11-May-2025