டிராக்டர் சாகசம் வாலிபர் பலி
ஹாசன்: சமூக வலைதளத்தில் பிரபலம் அடைவதற்காக, டிராக்டரில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹாசன் மாவட்டம், வி.ஜி., கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் கிரண், 19. இவர் 'இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்' செய்து பிரபலம் அடைய, டிராக்டரில் பல சாகசங்கள் செய்து, வீடியோவாக வெளியிட்டு வந்தார். நேற்றும் அரகல்கூடு தாலுகாவில் உள்ள கப்பள்ளிகெரே கிராமத்தில், டிராக்டரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். சாலையின் வளைவில் வேகமாக வந்தபோது, அவரால் டிராக்டரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், டிராக்டர் அவர் மீது கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிரண் உயிரிழந்தார். இந்த வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.