உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை

போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை

தட்சிணகன்னடா: தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா நகரின் கே.வி.ஜி., சந்திப்பு அருகில், நடப்பாண்டு ஏப்ரல் 20ம் தேதியன்று, இரவு 9:30 மணியளவில் சுள்ளியா போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கித் என்பவர், குடிபோதையில் பைக் ஓட்டி வந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சுள்ளியா ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி மோகன் பாபு தீர்ப்பளித்தார்.அது மட்டுமன்றி ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, சுள்ளியா போலீஸ் நிலைய வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sekar ng
ஜூலை 21, 2025 10:50

தமிழகத்தில் ஒருவர்கூட குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதில்லை. அதனால் ஒருவருக்கும் தண்டனை கிடைப்பதில்லை. எல்லாம் காவல்துறை சரிசெய்து விடும் திறமையை ஸ்டாலின் கற்று தண்டந்துள்ளார். ஐ டோன்ட் கேர்.