வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் மோசடி
உத்தரகன்னடா : உத்தரகன்னட மாவட்டம், ஹொன்னாவரா தாலுகாவின், ஹேரங்கடி கிராமத்தில் வசிப்பவர் ஜாகர் சாதிக் மொக்தேசர், 50. இவர் தன் கூட்டாளிகள், நவுஷாத் குவாஜா, ஹைதராபாத்தின் சுஜாதா ஜம்மி ஆகியோருடன் சேர்ந்து, வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து, மோசடி செய்தார். 'குவைத்தின் டிபென்ஸ் மருத்துவமனையில் வேலை காலியாக உள்ளது' என, விளம்பரம் வெளியிட்டனர். இதை கண்டு தொடர்பு கொண்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்தனர். 30 பேரிடம் 52 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். பணம் கொடுத்து பல நாட்களாகியும், வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பி கேட்டனர். பணத்தை தராமல் ஏமாற்றினர். இதுகுறித்து, ஹொன்னாளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கினர். ஜாபர் சாதிக்கையும், கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.