உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மடாதிபதியை மிரட்டிய யு டியூபர் கைது

மடாதிபதியை மிரட்டிய யு டியூபர் கைது

துமகூரு: வித்யா சவுடேஸ்வரி மடத்தின் பால மஞ்சுநாத சுவாமியை மிரட்டி, 25 லட்சம் ரூபாய் கேட்ட 'யு டியூபர்' கைது செய்யப்பட்டார். துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகாவின், வித்யா சவுடேஸ்வரி மடம் உள்ளது. இதன் மடாதிபதியாக பால மஞ்சுநாத சுவாமிகள் இருக்கிறார். மடத்தின் ஊழியர்களான அபிலாஷ், சுரேஷ், பக்தரான பீச்சனஹள்ளி கரிகவுடாவை தொடர்பு கொண்டு துமகூரை சேர்ந்த யு டியூபர் சுதீந்திரா, 30, என்பவர் ஜூன் 28ம் தேதியன்று, பேசினார். 'உங்கள் மடம் தொடர்பான, பல ரகசிய தகவல்கள் எனக்கு தெரியும். இந்த தகவல்களை வெளியிட்டால், மடத்தின் பெயர் பாழாகும். வெளியிட கூடாது என்றால், எனக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என, மிரட்டியுள்ளார். மடத்தின் ஊழியர்கள் பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் சுதீந்திரா தன் யு டியூப் சேனலில், வித்யா சவுடேஸ்வரி மடத்தை பற்றி, ஆதாரமற்ற அவதுாறுகளை பரப்பினார். இதுகுறித்து, துமகூரு நகர் போலீஸ் நிலையத்தில், மடாதிபதி மஞ்சுநாத சுவாமிகள் புகார் அளித்தார். இதன்படி விசாரணை நடத்திய போலீசார், சுதீந்திராவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை