உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / நாமினிகளை 4 பேராக அதிகரிக்க வங்கிகள் சட்டத்தில் திருத்தம்

நாமினிகளை 4 பேராக அதிகரிக்க வங்கிகள் சட்டத்தில் திருத்தம்

புதுடில்லி:வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்கும் வகையில், வங்கிகள் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது.நாடு முழுதும் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை, 2024 மார்ச் நிலவரப்படி, 78,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பல்வேறு காரணங்களால், பணத்தை எடுக்க முடியாமல், வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதை குறைக்கும் விதமாக, வங்கிகள் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள, வெள்ளியன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பார்லி.,யில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்த பின்னரே, முழு விபரம் தெரிய வரும். இருப்பினும், அதில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளன. தற்போது வங்கிகள், சேமிப்பு கணக்கு மற்றும் நிரந்தர வைப்பு கணக்கு வாடிக்கையாளர்கள், ஒரு 'நாமினி'யை மட்டுமே நியமிக்க அனுமதி வழங்குகின்றன. இதை, நான்கு நாமினிகள் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.n. Dhasarathan
ஆக 06, 2024 12:36

எது முக்கியமோ அதை பண்ணுங்க குறைந்த பட்ச தொகை என்று வங்கி கணக்கு வைத்திருப்போரிடமிருந்து அவர்களுக்கு தெரியாமலே பணம் பிடிப்பதை நிறுத்துங்க, ஏழை மக்கள் வயித்தில் அடிக்காதீங்க இதில் பெருமை வேறா ? சென்ற வருடம் அப்படி வசூல் 21000 கோடி. மக்கள் வயிறு எரியாதா? ஏன் இது உங்களுக்கு தெரியாதா? அல்லது மோகன் பகவத் சொல்லனுமா ? என்ன பாவமோ இந்தியா மக்கள்


KRISHNAN R
ஆக 05, 2024 19:28

வங்கிகளில் இது பற்றி யாரும் கவலை படவில்லை. கேட்டாலும் வேண்டா வெறுப்பா பதில் வரும்.


KRISHNAN R
ஆக 05, 2024 19:27

நாமினி இல்லாத அக்கவுண்ட் களை முதலில் சரி செய்ய வேண்டும். இரண்டு நாமினி இருந்தால் ஒன்று அல்டர்னடிவாக... பயன் அளிக்கும்


VEMBURAJ A
ஆக 05, 2024 11:36

பேங்க் முதல் நாசினி இல்லாத போதுதான் இரண்டாவதாக அடுத்த நாமினிக்கு கொடுக்கலாம். நான்கு நெமிலிச்சேரி சதமானம் முதலில் தீர்மானிக்க வேண்டிய அவசியமாக உள்ளது


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 05, 2024 10:24

சின்ன வீடுகளுக்கு இடையே பெரிய அளவில் மோதல்கள் வரத்துவங்கும்.


S. Narayanan
ஆக 04, 2024 13:55

உடனே அமுல் படுத்துவது மிகவும் அவசரம் மற்றும் மிக அவசியம்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ