வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வெள்ளியன்றும், இன்றும் பங்குச்சந்தை விழுங்குவிட்டதால் இப்படியொரு கட்டுரை .... correction என்பது சந்தையில் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வே .....
பங்கு முதலீட்டை பொறுத்தவரை நீண்ட கால அணுகுமுறையே ஏற்றதாக கருதப்படுகிறது. ஆனால் பொது பங்கு வெளியீட்டில் பங்குகள் பெறும் சில்லறை முதலீட்டாளர்களில் 50 சதவீதம் பேர், ஒரு வாரத்திற்குள் அந்த பங்குகளை விற்று விடுவதாகவும், 70 சதவீதம் பேர் பெரும்பாலான பங்குகளை முதலாண்டுக்குள் விற்றுவிடுவதாகவும், பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபியின் அண்மை ஆய்வு தெரிவிக்கிறது. வழக்கமாக வலியுறுத்தப்படும், நீண்ட கால முதலீடுகொள்கைக்கு எதிராக இந்த போக்கு அமைகிறது. எனவே, நிதி இலக்குகளை அடைய உதவும் வழிகளை முதலீட்டாளர்கள் அறிந்து செயல்படுவது அவசியம்:மறு முதலீடு:
ஒரு முதலீடு துவக்க காலத்தில் அளிக்கும் பலனைவிட பிந்தைய காலத்தில் அதிக பலன் அளிப்பதாக கருதப்படுகிறது. நீண்ட கால நோக்கில் கூட்டு வட்டி அல்லது மறுமுதலீட்டினால் உண்டாகும் பலனாக இது அமைகிறது. எனவே, நல்ல பலனை பெற தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம்.சந்தை விலை:
பொதுவாக பங்குகளின் விலையை, 'யாரோ ஒருவர்' தீர்மானிக்கும் விலையாக அலட்சியம் செய்ய வேண்டும் என கருதப்படுகிறது. 'திருவாளர் சந்தை' எனும் அந்த யாரோ ஒருவர் தினமும் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த விலை, அவரது வாங்கும் சக்திக்கு ஏற்ப சொல்லும் விலையாகும்.ஏற்ற இறக்கம்:
சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும். சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப செயல்படும் உணர்வை முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும். ஏற்ற இறக்கத்தை பற்றி கவலைப்படாமல், வாங்கிய பங்கின் அடிப்படையில் முதலீட்டை தொடர வேண்டும்.
நீண்ட காலம்:
பங்கு முதலீடு என்பது நீண்ட கால நோக்கிலானது. முதலீடு தொகுப்பை உருவாக்கும் போது இதை மனதில் கொள்ள வேண்டும். இளம் வயதில் பங்கு முதலீட்டின் விகிதம் அதிகம் இருக்கலாம் என்றும், வயதாவதற்கு ஏற்ப இதை குறைக்கலாம் என்றும் பொதுவாக வலியுறுத்தப்படுகிறது.
சீரான முதலீடு:
சந்தையின் ஏற்ற இறக்கம் உண்டாக்க கூடிய தாக்கத்தை எதிர்கொள்ள எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீடு முறை வாயிலாக முதலீடு செய்யலாம். பெரும்பாலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நீண்ட கால அணுகுமுறையை பின்பற்றுவதாக செபி ஆய்வு அறிக்கை குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
வெள்ளியன்றும், இன்றும் பங்குச்சந்தை விழுங்குவிட்டதால் இப்படியொரு கட்டுரை .... correction என்பது சந்தையில் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வே .....