இந்தியர்களை அதிகம் வாட்டும் நிதி கவலை
அடுத்த ஐந்தாண்டுகளில் நிதி நிச்சயமின்மையை எதிர்கொள்ளும் நிலை வரலாம் எனும் கவலை பெரும்பாலான இந்தியர்களுக்கு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.தனியார் காப்பீடு நிறுவனம் ஆதித்ய பிர்லா சன்லைப் இன்சூரன்ஸ், கிட்டத்தட்ட எட்டாயிரம் பங்கேற்பாளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில், 88 சதவீதம் பேர் அடுத்த ஐந்தாண்டுகளில் நிதி நிச்சயமின்மையை எதிர்கொள்ள நேரிடும் எனும் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த கவலையை சமாளிக்கும் வகையில் காப்பீடு பெறுவது, அவசர கால நிதியை சேமிப்பு கணக்கில் பராமரிப்பது, வைப்பு நிதி துவக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் நிதி திட்டமிடலை மேற்கொண்டுஇருப்பதாகவும் தெரிவித்துஉள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில், 35 சதவீதம் பேர் வேலையிழப்பு நிதி நிச்சயமின்மைக்கு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் பலர் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன நுட்பங்கள் பணியிடத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் நிதி நிச்சயமின்மையை உண்டாக் கலாம் என அஞ்சுவதாக கூறியுள்ளனர். பலரும் குறுகிய கால முதலீட்டை விட நீண்ட கால முதலீட்டை நாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.