மேலும் செய்திகள்
வங்கி கடன் 11% வளர்ச்சி ரிசர்வ் வங்கி தகவல்
20-Oct-2025 | 2
இந்திய வங்கிகளை குறிவைக்கும் சர்வதேச நிறுவனங்கள்
20-Oct-2025 | 1
வங்கி கடன் 11% வளர்ச்சி ரிசர்வ் வங்கி தகவல்
20-Oct-2025
மும்பை: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கிட்டத்தட்ட 17,000 கிரெடிட் கார்டுகளை, தவறான பயனர்களுக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் அனைத்து கார்டுகளையும் 'பிளாக்' செய்து விட்டதாகவும், தவறான பயன்பாடு நடைபெற்றதாக இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என்றும் வங்கி தெரிவித்துள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு 17,000 கிரெடிட் கார்டுகளை சமீபத்தில் வழங்கியுள்ளது. இந்நிலையில், கிரெடிட் கார்டுகள் வாடிக்கையாளர்களை சென்றடைந்த பின், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் இந்த கிரெடிட் கார்டுகளை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, தவறான பயனர்களுக்கு கிரெடிட் கார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, வங்கியின் பிரத்யேக இணைய செயலியான 'ஐ மொபைல் பே' செயலியில் பலருக்கு சம்பந்தமற்ற நபர்களின் கிரெடிட் கார்டு குறித்த தகவல்கள் பிரதிபலித்துள்ளன. இதைக் கண்ட சிலர், தங்களது சமூக ஊடக பக்கங்களில் புகார் தெரிவித்து உள்ளனர்.இதைத்தொடர்ந்து, இதுபற்றிய தகவல் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே அனைத்து கார்டுகளையும் பிளாக் செய்துவிட்டதாக ஐ.சி.ஐ.சி.ஐ., தெரிவித்துள்ளது. மேலும், தவறான பயன்பாடு தொடர்பாக, இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும்; அவ்வாறு யாரேனும் புகார் எழுப்பினால், அவர்களுக்கு அந்த நிதி இழப்பு ஈடு செய்யப்படும் என்றும் வங்கி தெரிவித்துஉள்ளது. மேலும் கார்டு பிளாக் செய்யப்பட்ட அனைத்து பயனர்களுக்கும், புதிய கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., தெரிவித்துள்ளது.
20-Oct-2025 | 2
20-Oct-2025 | 1
20-Oct-2025