பணம் பறிக்க முயற்சி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
மும்பை:ரிசர்வ் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி முயற்சிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவ்வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:ரிசர்வ் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பல்வேறு வகையான மோசடிகளில் சிலர் ஈடுபட முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஓ.டி.பி., கே.ஒய்.சி., வங்கி லாக்-இன் விபரங்களை கேட்கும் நபர்களிடம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி ஊழியர்கள் எனக்கூறி, வங்கியின் பெயர் அச்சிட்ட போலி கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பி, லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாகவும் கூறி பணம் பறிக்க நடக்கும் முயற்சிகளை நம்பி ஏமாற வேண்டாம். வங்கி விபரங்கள், ஓ.டி.பி., போன்றவற்றை ரிசர்வ் வங்கியோ, அதன் ஊழியர்களோ கேட்பதில்லை.