உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / தொழில் பயிற்சி திட்டங்களுக்கான உதவித்தொகையை உயர்த்த முடிவு

தொழில் பயிற்சி திட்டங்களுக்கான உதவித்தொகையை உயர்த்த முடிவு

புதுடில்லி : தொழில் பயிற்சி திட்டங்களுக்கான உதவித்தொகையை உயர்த்த, மத்திய தொழில் பயிற்சி கவுன்சில் முடிவு செய்து உள்ளது. இதன்படி, தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர உதவித்தொகை 5,000 ரூபாயில் இருந்து, 6,800 ரூபாயாகவும், அதிகபட்ச உதவித்தொகை 9,000 ரூபாயில் இருந்து 12,300 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.மத்திய அரசு, பிரதமர் தேசிய தொழில் பயிற்சி மேம்பாடு திட்டத்தின் கீழ் அரசின் பங்களிப்பாக 1,500 ரூபாய் அல்லது மொத்த உதவித்தொகையில் 25 சதவீதத்தையும்; தேசிய தொழில் பயிற்சி திட்டத்தில் 50 சதவீத உதவித்தொகை எனவும் இரண்டு தொழில் பழகுநர் பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில், தற்போது ஐந்து பிரிவுகளின் அடிப்படையில், 5,000 முதல் 9,000 ரூபாய் வரை உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டில்லியில் 38வது மத்திய தொழில் பயிற்சி கவுன்சிலின் கூட்டம், அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளதாவது:பல்வேறு பிரிவினருக்கான தொழில் பழகுநர் உதவித்தொகையை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், தொழில் துறையினரும், இளைஞர்களும் பயன் பெறுவர். உலகின் மிகப்பெரிய தொழில் பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை கண்டறிய, ஆன்லைன் அடிப்படையிலான தொழில் பயிற்சி திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 2021 ஜூனில் இருந்து, நாடு முழுதும் 51,000 நிறுவனங்களில் 43.47 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் ஆன்லைன் வாயிலாக, அடிப்படை பயிற்சி வழங்க பாடத்திட்டம் உருவாக்க பரிந்துரை தொழில் பயிற்சியுடன் கூடிய கல்வித்திட்டங்களை மேம்படுத்த, கல்வித்தகுதியை வரைமுறைப்படுத்த பரிந்துரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை