உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி /  பசுமை மின்சார நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் தேவை

 பசுமை மின்சார நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் தேவை

மும்பை: மின் வாகனம், சோலார் தொழில்நுட்பம் உள்ளிட்ட வளரும் புதிய துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டம் வழங்குவது குறித்து அரசுடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேசி வருவதாக அதன் நிர்வாக இயக்குநர் அஷ்வினி குமார் திவாரி கூறியுள்ளார். மும்பையில் சி.ஐ.ஐ., மாநாட்டில் அவர் பேசியதாவது: வழக்கமான துறைகள் மட்டுமின்றி, புதிய மற்றும் சவாலான துறைகளுக்கும் கடன் உத்தரவாத திட்டம் அவசியம். குறிப்பாக, மின்வாகனங்கள், உயர்தர சோலார் தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா, பேட்டரி மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்ட எட்டு துறைகளுக்கு இந்த வசதியை அளிக்க, மத்திய அரசுடன் பேசி வருகிறோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ