மேலும் செய்திகள்
மன்னர் கல்லுாரியில் யுகாதி விழா
07-Apr-2025
மும்பை : இண்டஸ்இண்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரி சுமந்த் காத்பாலியா, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மும்பையை தலைமையிடமாக கொண்ட இண்டஸ்இண்ட் வங்கியின் கணக்குகளில் முரண்பாடுகள் இருப்பது கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, சந்தையில் அவ்வங்கியின் பங்குகள் கடும் சரிவை கண்டதால், 1,960 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது.இந்நிலையில், நஷ்டத்துக்கு பொறுப்பேற்று சுமந்த் காத்பாலியா, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.நேற்று முன்தினம், இண்டஸ்இண்ட் வங்கியின் துணை தலைமை செயல் அதிகாரி அருண் குரானா தன் பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
07-Apr-2025