உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி /  பே யு நிறுவனத்துக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல்

 பே யு நிறுவனத்துக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல்

புதுடில்லி: பே யு நிறுவனம் ஆன்லைன், ஆப்லைன் மற்றும் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளுக்கு பேமென்ட் இடைத்தரகராக செயல்பட ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது. நாட்டின் முன்னணி நிதி தொழில்நுட்ப தளங்களில் ஒன்றாக விளங்கி வரும் பே யு, தற்போது வரை பேமென்ட் கேட்வே சேவையை வழங்கி வருகிறது. இந்த ஒப்புதலை தொடர்ந்து, சில்லரை வணிகம், ஆன்லைன் தளங்கள், மொபைல் செயலி, ஆப்லைன் கடைகள் என அனைத்து விற்பனை நிலையங்களிலும், தடையில்லாத, ஒரே மாதிரியான பேமென்ட் சேவைகளை வழங்க முடியும். தற்போது வரை 4.50 லட்சத்துக்கும் அதிகமான வணிகங்களுக்கு, 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் பேமென்ட் முறைகளில் பணம் வசூலிக்க உதவி வருவதாகவும், ரிசர்வ் வங்கியின் இந்த ஒப்புதல், நாட்டின் டிஜிட்டல் பேமென்ட் துறையில் தங்கள் இருப்பை வலுப்படுத்த உதவும் என்று பே யு நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ