விமான பயணி எண்ணிக்கைடிசம்பரில் புதிய உச்சம்
இந்தியாவில், விமான பயணியர் எண்ணிக்கை, கடந்த டிசம்பரில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இம்மாதத்தில் உள்நாட்டு பயணியர் எண்ணிக்கை 1.38 கோடியாக உயர்ந்துஉள்ளது.இது கடந்த 2022 டிசம்பருடன் ஒப்பிடுகையில், 8.4 சதவீதமும், 2019 டிசம்பருடன் ஒப்பிடுகையில், 6.1 சதவீதமும் உயர்வாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக, கடந்த ஆண்டு மே மாதத்தில் பயணியர் எண்ணிக்கை 1.32 கோடியாக இருந்தது. ஆண்டு இறுதி விடுமுறை காலம் என்பதால், விமான பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
'அலோக் இண்டஸ்ட்ரீஸ்' ரிலையன்ஸ் முதலீடு
'ரிலையன்ஸ்' நிறுவனம், 'அலோக் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தில், 3,300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அலோக் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம், ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனத்தை கடந்த 2019ல், ரிலையன்ஸ் மற்றும் 'ஜெ.எம்., பைனான்ஷியல் ஆர்க்' நிறுவனங்கள் கையகப்படுத்தின. அலோக் நிறுவனத்தின் 40.01 சதவீத பங்குகளை, ரிலையன்ஸ் வைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்நிறுவனத்தின், 3,300 கோடி பங்குகளை, தலா ஒரு ரூபாய்க்கு, ரிலையன்ஸ் வாங்கி உள்ளது.
ரி 'டாடா பே',-க்கு உரிமம்சர்வ் வங்கி வழங்கியது
டாடா குழுமத்துக்கு சொந்தமான டிஜிட்டல் பேமன்ட் தளமான 'டாடா பே', ரிசர்வ் வங்கியிடம் இருந்து கட்டண சேவை வழங்குனர் உரிமத்தை பெற்றுள்ளது. இதன் வாயிலாக, டாடா பே, மின்னணு வணிக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். அதன் துணை நிறுவனங்களில் அனைத்து பரிவர்த்தனைகளையும், இவ்வாறு மாற்றுகையில் அது நிதியை சிறப்பாக நிர்வகிக்க உதவும். முன்னதாக, 'ரேசர்பே, கேஷ்ப்ரீ பேமன்ட்ஸ், ஓப்பன் பைனான்ஷியல், என்கேஷ்' உள்ளிட்ட ஆறு டிஜிட்டல் பேமன்ட் தளங்களுக்கு, ரிசர்வ் வங்கி உரிமம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.