ரூ.3,000 கோடி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் வாபஸ்
புதுடில்லி,:இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள், 2017 - 18 நிதியாண்டுக்கு 3,000 கோடி ரூபாய் வரி செலுத்த அனுப்பப்பட்ட நோட்டீஸை, ஜி.எஸ்.டி., பொது இயக்குனரகம் திரும்பப் பெற்றது. குறிப்பிட்ட நிதியாண்டில் எந்த இறக்குமதியும் மேற்கொள்ளப்படவில்லை என, அந்த 18 நிறுவனங்கள் தெரிவித்ததை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், 'மெர்க்ஸ்க், ஓரியன்ட் ஓவர்சீஸ் கன்டெய்னர் லைன், ஹேபக் - லாய்ட் மெரிடெரினன் ஷிப்பிங்' உள்ளிட்ட நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன. எனினும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி., செலுத்தக் கோரி அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் அமலில் இருக்கும் என்று, ஜி.எஸ்.டி., இயக்குனரகம் தெரிவித்துள்ளது.