வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்போ MSME?
புதுடில்லி : ஸ்டார்ட்அப்களுக்கான புதிய மையப்படுத்தப்பட்ட இணையதளமான, 'பாஸ்கர்' எனப்படும் 'பாரத் ஸ்டார்ட்அப் நாலெட்ஜ் அக்சஸ் ரெஜிஸ்ட்ரி'யை, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் துவக்கி வைத்தார்.ஸ்டார்ட்அப்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள், சேவை வழங்குனர்கள் மற்றும் அரசு அமைப்புகள் உள்ளிட்ட ஸ்டார்ட்அப் சூழல்களுக்கான பல்வேறு பங்களிப்பாளர்களை ஒன்றிணைக்கவும், வளர்ச்சிக்கான கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும், ஒரு மையப்படுத்தப்பட்ட தளத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு அரசு இத்தளத்தை துவக்கியுள்ளது. துவக்க நிகழ்வின் போது கோயல் கூறியதாவது: கிட்டத்தட்ட 1.50 லட்சம் ஸ்டார்ட்அப்களை உள்ளடக்கிய பங்குதாரர்களின் டிஜிட்டல் மைய பதிவேட்டில், 15 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அறிவித்து உள்ளது இத்தளம். ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பில் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ளவும், தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கவும், இத்தளம் கவனம் செலுத்தும். இத்தளத்தை பயன்படுத்த, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு தனிப்பட்ட பாஸ்கர் ஐ.டி., ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இத்தளத்தை பயன்படுத்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு தனிப்பட்ட பாஸ்கர் ஐ.டி., ஒதுக்கப்படும்
அப்போ MSME?