உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உள்நாட்டில் விமான தயாரிப்பு பணிகள் விரைவில் துவங்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தகவல்

உள்நாட்டில் விமான தயாரிப்பு பணிகள் விரைவில் துவங்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தகவல்

புதுடில்லி:இந்தியாவை விமான தயாரிப்புக்கான மையமாக மாற்றும் வகையில், விரைவில், உள்நாட்டிலேயே விமானங்களை தயாரிக்க உள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:ஏற்கனவே 119 பேர் பயணிக்கும் திறன் கொண்ட விமானத்தை தாயாரித்துள்ள அனுபவம் உள்ளதால், இத்திட்டத்தில் 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும். இதற்காக, தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளைக் கொண்ட பிரத்யேக நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்படும். உள்நாட்டில் விமானங்களை தயாரிப்பதற்கான முழு பொறுப்பும் இந்த நிறுவனத்திடம் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி