உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கோ - டிஜிட் நிறுவனம் புதிய பங்கு வெளியீடு

கோ - டிஜிட் நிறுவனம் புதிய பங்கு வெளியீடு

புதுடில்லி : பெங்களூரை சேர்ந்த காப்பீடு மற்றும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான, 'கோ - டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ்', புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதன் பங்கு வெளியீடு 15ம் தேதி துவங்கி, 17ல் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பங்கு வெளியீட்டின் போது 1,125 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளையும், பங்குதாரர்கள் வசம் இருக்கும் 5.47 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.இதன் பங்குதாரர்கள் பலர் பங்குகளை விற்பனை செய்ய இருப்பினும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி