உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிறிய கார் வாங்க ஆர்வம் இல்லை ஏற்றுமதியால் சரிக்கட்டும் நிறுவனங்கள்

சிறிய கார் வாங்க ஆர்வம் இல்லை ஏற்றுமதியால் சரிக்கட்டும் நிறுவனங்கள்

புதுடில்லி:இந்தியாவில். சிறிய கார்களின் விற்பனை சமீபகாலமாக சரிந்து வருகிறது. இதையடுத்து, வெளிநாட்டு சந்தைகளில் சிறிய கார்களை விற்பனை செய்யும் முயற்சியை தீவிரப்படுத்தி வருகின்றன வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு காலத்தில் விற்பனையில் முன்னிலை வகித்த சிறிய கார்களின் பங்கு, தற்போது 30 சதவீதத்துக்கும் கீழாக குறைந்து உள்ளது.இருப்பினும், வெளிநாட்டு சந்தைகளில் இவற்றின் தேவை நன்றாக இருப்பதால், அங்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாருதி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:கடந்த 2018ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த பயணியர் வாகனங்கள் விற்பனையில், சிறிய ரக கார்களின் பங்கு, 47.40 சதவீதமாக இருந்தது. இதற்கு அடுத்த நிதியாண்டில், 46 சதவீதமாக குறைந்தது. பின் கடந்த 2020ம் நிதியாண்டில், விற்பனை லேசாக அதிகரித்து இருந்தாலும், அதற்கு அடுத்த நிதியாண்டுகளில், சிறிய ரக கார்களின் விற்பனை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. அதேசமயம் எஸ்.யு.வி., வகை வாகனங்களின் பங்கு, மொத்த பயணியர் வாகன விற்பனையில் 53.60 சதவீதமாக உயர்ந்து உள்ளது.பாதுகாப்பு ஒழுங்குமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஹேட்ச்பேக் எனும் சிறிய ரக கார்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனால், இவற்றை வாங்கும் திறன் வாடிக்கையாளர்களிடம் அதே அளவுக்கு அதிகரிக்கவில்லை.இதன் காரணமாக, ஹேட்ச்பேக் வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளது. இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த 2019ம் நிதியாண்டில், சரிவை கண்டது. ஆனால், தற்போது அவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இதேபோல், ஹேட்ச்பேக் வாகனங்களுக்கான தேவையும், வரும் 2026 அல்லது 2027ம் ஆண்டு இறுதிக்குள், மீண்டும் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.

நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்