உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / திருப்பூரில் 3 கண்காட்சிகள் துவக்கம்

திருப்பூரில் 3 கண்காட்சிகள் துவக்கம்

திருப்பூர்: ''யார்னெக்ஸ் - டெக்ஸ் இந்தியா,' கண்காட்சிகள், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன,'' என, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்கார ஜவுளித்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் தெரிவித்து உள்ளார்.'யார்னெக்ஸ்', 'டெக்ஸ் இந்தியா' மற்றும் 'டைகெம்' ஆகிய மூன்று கண்காட்சிகள், திருப்பூர் அருகே ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது. கண்காட்சி குறித்து, ஆயத்த ஆடை, வீட்டு அலங்கார ஜவுளித்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறியதாவது: திருப்பூரில், 14வது 'யார்னெக்ஸ்' கண்காட்சி, 200 ஸ்டால்களுடன் கோலாகலமாக துவங்கியுள்ளது. நுாலிழை, பின்னலாடை துணி ரகங்கள், சாயம் மற்றும் ரசாயனப் பொருட்களுக்கான கண்காட்சிகள் துவங்கியுள்ளன.காலத்துக்கு ஏற்ற வகையில், புதுவகை நுால்கள், ஆடைகள், துணி ரகங்களை காட்சிப்படுத்திப்படுத்தி உள்ளனர். இக்கண்காட்சிகள், திருப்பூர் ஏற்றுமதிக்கு மிகவும் உதவியாக இருக்கும். வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி - பசுமை சார் உற்பத்தியை அடையாளப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளது. நுால் விலை ஸ்திரமாக இருக்கவும் இத்தகைய கண்காட்சிகள் உதவியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை