உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உத்யம் தளத்தில் பதிவு செய்ய சிறுதொழில்களுக்கு அறிவுறுத்தல்

உத்யம் தளத்தில் பதிவு செய்ய சிறுதொழில்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை:தொழிலுக்கு அடையாளம் கிடைக்க, 'உத்யம்' தளத்தில் பதிவு செய்யவும் என, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை, தமிழக அரசின், 'பேம் டி.என்' நிறுவனம் அறிவுறுத்திஉள்ளது.மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, நாடு முழுதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த, 'உத்யம்' சான்று வழங்குகிறது. இது, தொழில் நிறுனங்களின் சுய விபரங்களை உள்ளடக்கியது. இதற்கு, 'உத்யம்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மத்திய-, மாநில அரசுகள், தொழில் நிறுவனங்களை துவக்கவும், விரிவாக்கம் செய்யவும் மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்குகின்றன. இதற்கு, 'உத்யம்' பதிவு அவசியம். தமிழகத்தில், 62 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உத்யம் தளத்தில், 27.50 லட்சம் நிறுவனங்களே பதிவு செய்துள்ளன.எனவே, இதுவரை பதிவு செய்யாத நிறுவனங்கள், விரைவாக உத்யம் தளத்தில் பதிவு செய்யுமாறு பேம் டி.என்., அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை