மேலும் செய்திகள்
சேவைகள் துறை வளர்ச்சி 2 ஆண்டுகளில் இல்லாத சரிவு
06-Feb-2025
புதுடில்லி:சேவைகள் துறையின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, நடப்பு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வணிக வளர்ச்சி, ஆறு மாத உச்சத்தை எட்டியுள்ளதாக, பி.எம்.ஐ., குறியீட்டு தரவுகள் காட்டுகின்றன. 'எஸ் அண்டு பி., குளோபல்' நிறுவனத்தின் உதவியோடு, எச்.எஸ்.பி.சி., வங்கி ஒவ்வொரு மாதமும் இந்திய தனியார் துறை நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து பி.எம்.ஐ., குறியீடு வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக பிளாஷ் இந்தியா பி.எம்.ஐ., குறியீட்டையும் வெளியிடுகிறது.கூட்டு பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு 60.60 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஜனவரி மாதம் 57.70 புள்ளிகளாக இருந்தது. இந்த குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியை குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும்.பிப்ரவரி மாத வளர்ச்சிக்கு சேவைகள் துறையே முக்கியப் பங்காற்றிஉள்ளது. கடந்த ஜனவரியில் 56.50 புள்ளிகளாக சரிந்திருந்த சேவைகள் துறை வளர்ச்சி, இம்மாதம் 61.10 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தயாரிப்பு துறை வளர்ச்சி 57.70ல் இருந்து 57.10 புள்ளிகளாக சரிந்துள்ளது.தேவை அதிகரிப்பின் காரணமாக, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளதாகவும்; பணியமர்த்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளால் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் நிலையில், வணிக வளர்ச்சி நம்பிக்கை அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது.
06-Feb-2025