மேலும் செய்திகள்
வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பயிற்சி
04-Aug-2024
புதுடில்லி:சுற்றுலா தொடர்பாக 20,000 இந்திய இளைஞர்களுக்கு திறன்வளர்ப்பு பயிற்சி அளிக்க, மின்னணு பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனமான 'விசா'வும், மத்திய அரசின் டி.எச்.எஸ்.சி.,யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுஉள்ளன.மத்திய திறன் வளர்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும், சுற்றுலா, விருந்தோம்பல் குறித்த திறன் மேம்பாட்டு கவுன்சிலான டி.எச்.எஸ்.சி., மற்றும் விசா நிறுவனம் இடையேயான இந்த ஒப்பந்தப்படி, கிட்டத்தட்ட 84 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று ஆண்டுகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். அசாம், குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட 10 மாநிலங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.உள்நாட்டு சுற்றுலா துறைக்கு அவசியமான, சுற்றுலா வழிகாட்டி, வாடிக்கையாளர் சேவை, இயற்கை ஆர்வலர்கள், பாரா கிளைடிங் பைலட் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 20,000 இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என, மத்திய திறன் வளர்ப்பு பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.
04-Aug-2024