உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இரு மடங்காக உயர்ந்த பருப்பு இறக்குமதி

இரு மடங்காக உயர்ந்த பருப்பு இறக்குமதி

புதுடில்லி: இந்தியாவின் பருப்பு இறக்குமதி, 2024ம் நிதியாண்டில் இரு மடங்கு அதிகரித்து, 45 லட்சம் டன் என்ற அளவில் இருப்பதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.நாட்டில் பருப்பு வகைகளின் இறக்குமதி கடந்த 2023ம் நிதியாண்டில், 24.50 லட்சம் டன்னாக இருந்த நிலையில், 2024ம் நிதியாண்டில் இரு மடங்கு உயர்ந்து, 45 லட்சம் டன்னாக உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளின் மொத்த மதிப்பு, 31,000 கோடி ரூபாய். குறைந்தபட்ச கொள்முதல் விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு அரசு முயற்சிகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு பருப்பு உற்பத்தி சமீப காலமாக குறைந்துள்ளது. உள்நாட்டு பருப்பு தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், விலைவாசியை கட்டுப்படுத்துவதற்காகவும், பிரேசில், அர்ஜென்டினா போன்ற பிற புதிய சந்தைகளில் இருந்து, பருப்பு இறக்குமதி செய்ய அரசு பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பருப்பு வகைகளில் பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 19 சதவீதமாகவும், மார்ச்சில் 17 சதவீதமாகவும் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, சில்லரை விலை பணவீக்கம் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


துளிகள்

20 hour(s) ago  



எண்கள்

20 hour(s) ago  


புதிய வீடியோ