சி.ஐ.ஐ., தமிழக தலைவராகிறார் உன்னிகிருஷ்ணன்
சென்னை:இந்திய தொழிற்கூட்டமைப்பின், 2025 - 26ம் நிதியாண்டுக்கான தமிழக தலைவராக ஏ.ஆர்.உன்னிகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவரான ஸ்ரீவட்ஸ் ராமின் பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், துணைத் தலைவராக உள்ள உன்னிகிருஷ்ணன் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயின்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் கண்ணாடி பிரிவின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வரும் இவர், 32 ஆண்டு காலம் தொழில்துறை அனுபவத்தை கொண்டுள்ளார். இந்நிலையில் சி.ஐ.ஐ.,யின் தமிழக துணைத் தலைவராக சி.தேவராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.