உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிப்பால் ஓராண்டில் 2 லட்சம் கடைகள் மூடல்

ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிப்பால் ஓராண்டில் 2 லட்சம் கடைகள் மூடல்

புதுடில்லி:ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் அதீத அதிகரிப்பால் நாடு முழுதும், கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் மளிகைக் கடைகள் மூடப்பட்டதாக, அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் வினியோக நிறுவன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:'குயிக் காமர்ஸ்' எனப்படும் ஆன்லைன் துரித வணிகம், மிக விரைவாக, வீட்டின் பக்கத்தில் உள்ள கடைகள் மூடப்பட காரணமாகி வருகிறது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஆன்லைன் வணிகம், மளிகைக் கடைகள் உள்ளிட்டவற்றின் வாடிக்கையாளர்களையும், லாபத்தையும் வேகமாக இழக்கச் செய்து உள்ளது.

நியாயமற்ற சூழல்

இத்தகைய வணிகத்தின் கவர்ச்சிகரமான விலை நிர்ணயம், அதிக தள்ளுபடி ஆகியவற்றால், நியாயமற்ற, சமநிலையற்ற வணிகச் சூழல் நிலவுகிறது. இதுபோன்ற தீவிர வணிக நடைமுறைகளுடன் பொருளாதார மந்தநிலையும் பாரம்பரிய கடைகள் மூடுவதற்கு காரணமாகின்றன.ஆன்லைன் வணிக நிறுவனங்களிடம் இருந்து தங்களுக்கு வரும் ஆர்டர்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பதாகவும், இது நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுவதாகவும், நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் நேரடி ஆன்லைன் விற்பனை, 250 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் வணிகத்தால் கடை வணிகம் பாதிக்கப்பட்டு, மூடப்படும் நிலை ஏற்படுவது மெட்ரோ நகரங்களில் அதிகம். ஓராண்டில் 90,000 கடைகள் நகரங்களில் மூடப்பட்டுள்ளன.

பாதுகாக்க வேண்டும்

நடுத்தர நகரங்களில் 60,000 கடைகளும், சிறுநகரங்களில் 50,000 கடைகளும் மூடப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைன் வணிகத்தை முறைப்படுத்தவும் சிறுவணிகர்களை பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும்.இதுதொடர்பாக, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நட்டா, இந்திய போட்டி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஓராண்டில் மூடப்பட்ட கடைகள்மெட்ரோ நகரங்கள் 90,000 நடுத்தர நகரங்கள் 60,000 சிறுநகரங்கள் 50,000 நாடு முழுதுமாக மொத்தம் 2 லட்சம் கடைகள் மூடல்நாட்டில் மொத்தம் 1.30 கோடி சிறிய கடைகள் உள்ளனமாறும் பாரம்பரியம்ஆன்லைன் வணிகத்தால் சிறுவணிகங்கள் பாதிக்கப்படுவதாக எழும் புகார் நீண்ட காலமாக உள்ளது. எனினும், காலப்போக்கில், ஆன்லைன் வணிகத்தை எதிர்கொள்ள, மளிகைக் கடைகள், டிபார்ட் மென்டல் ஸ்டோர்களும் ஆன்லைனுக்கு மாறுவது அதிகரித்துள்ளது. பாரம்பரியமான மனக்கணக்கு, துண்டுச்சீட்டு ஆகியவற்றில் எழுதித் தருவதில் இருந்து கணினி ரசீது, துல்லிய எடைக்கேற்ற விலைப் பதிவு, வாட்ஸாப் செய்தால் வீட்டுக்கே டெலிவரி, ஓரிரு பொருட்கள் என்றாலும் வீடு தேடி சேவை என அவை மாறி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sree
அக் 30, 2024 19:28

கண்களில் கண்ணீர் வரவழைக்கின்றது


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 30, 2024 11:14

ஆன்லைன் வியாபாரம் என்றாலும் அந்நிறுவனங்கள் அவர்கள் பெரும் ஆர்டர்களை கஸ்டமர்களின் வீட்டிற்கு அருகே உள்ள தங்களிடம் ரெஜிஸ்டர் செய்துள்ள கடைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இது கிட்டத்தட்ட சுவிக்கி, ஜோமொடோ, ஓலா, ஊபர் போன்றதுதான். கடைக்காரர்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.


nathan
அக் 30, 2024 08:52

போக்குவரத்து நெரிசல், இருவரும் வேலைக்கு செல்வது, நேரமின்மை போன்ற பல காரணங்களால் ஆன்லைன் வணிகம் தவிர்க்க முடியாதது ஆகி விட்டது.


அப்பாவி
அக் 30, 2024 06:13

கடையை மூடிட்டு தவிக்கிறவங்களுக்கு ஜீ தனியா அரசு வேலை போட்டுக்குக்கப் போறாரு. கவலை வேணாம். பீதி வாணாம்.


SIVA
நவ 15, 2024 13:31

பெரும் மழை வந்து பவர் கட் ஆகும் போது ஆன்லைன் பொருள் வாங்க முடியாது, இது போன்ற கஷ்டமான சமயங்களில் உங்களிடம் பணம் இல்லை என்றாலும் உங்களை மட்டுமே நம்பி கடன் தருவது சிறு வணிகர்கள் மட்டுமே, சூப்பர் மார்க்கெட், செயின் ஸ்டோர், கார்பொரேட் நிறுவணங்கள் உங்களை நம்பி கடன் தராது, கிரெடிட் கார்டு எப்போதாவது பணம் சரியாக கட்ட வில்லை என்றால் அது உங்களை வைத்து வட்டி அபராதம் என்ற பெயரில் முழுமையாக சம்பாதித்து விடும், இந்தியாவின் முக்கியமான கிரெடிட் கார்டு சிட்டி பேங்க் என்ற பேங்க் சார்ந்தது , இப்போது அதன் பேங்க் கிளை இந்தியாயில் இல்லை, கிரெடிட் கார்டு டிவிஷன் மட்டுமே உள்ளது, யார் எப்படி பேசினாலும் அருகில் உள்ளவர்களால் மட்டுமே ஆபத்து காலத்தில் உதவ முடியும் ....


சமீபத்திய செய்தி