உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / போர் விமான திட்ட ஏலத்தில் பங்கேற்க 3 நிறுவனங்கள் கூட்டு

போர் விமான திட்ட ஏலத்தில் பங்கேற்க 3 நிறுவனங்கள் கூட்டு

புதுடில்லி:இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை 'ஸ்டெல்த்' ரக போர் விமான திட்ட ஏலத்தில் பங்கேற்பதாக, 'பி.இ.எம்.எல்., என்ற பாரத் எர்த் மூவர்ஸ், பாரத் போர்ஜ் மற்றும் டேட்டா பேட்டன்ஸ்' ஆகிய மூன்று நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளன. இதில், 'பாரத் போர்ஜ்' நிறுவனம் 50 சதவீதம் பங்கையும், 'பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனம் 30 சதவீத பங்கையும், 'டேட்டா பேட்டன்ஸ்' நிறுவனம் மீதம் உள்ள 20 சதவீத பங்கையும் வைத்துள்ளன. 'ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு' நிறுவனத்தின் 'விமான மேம்பாட்டு முகமை', ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டத்தை வடிவமைத்துள்ள நிலையில், இதற்கான முன்மாதிரி மற்றும் 5 போர் விமானங்களை உருவாக்க அழைப்பு விடுத்தது. இதற்கான பரிந்துரைகளை, செப்டம்பர் 30க்குள் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே, 'எல் அண்ட் டி' மற்றும் 'பார்த் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனங்கள் கூட்டு இணைந்து, ஏலத்தில் பங்கேற்பதாக தெரிவித்து இருந்தன. மேலும், 'அதானி, டாடா குழுமங்கள், ஹிந்துஸ்தான் எலக்ட்ரானிக்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை