பெங்களூரில் ரூ.40 கோடியில் மின்வாகன உபகரண ஆலை
பெங்களூரு:'ஸ்டெர்லிங் டெக் மொபிலிட்டி' நிறுவனம், சீனாவைச் சேர்ந்த 'குன்ஷன் நியூ எனர்ஜி டெக்னாலஜி' நிறுவனத்துடன் இணைந்து, 40 கோடி ரூபாயில், மின்சார வாகன மின் உபகரண உற்பத்தி ஆலையை, பெங்களூரில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வணிகம், 2030க்குள் 250 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மின்சார வாகனங்களில் தீ விபத்துகளை தவிர்க்கும், உயர்மின் அழுத்த இணைப்புகள் மற்றும் கருவிகள் ஆகியவை இந்த ஆலையில் தயாரிக்கப்பட உள்ளன. அதாவது பேட்டரி, மோட்டார் மற்றும் இதர மின் அமைப்புகள் இடையே பாயும் மின்சாரத்தை, பாதுகாப்பான முறையில் கட்டுப்படுத்த, இந்த உபகரணங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.