உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.70,300 கோடி நிலுவை: அரசுடன் வோடபோன் பேச்சு

ரூ.70,300 கோடி நிலுவை: அரசுடன் வோடபோன் பேச்சு

புதுடில்லி:மொத்த வருவாய் கணக்கீடு தொடர்பான வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்ததால், தன் 70,300 கோடி ரூபாய் நிலுவை குறித்து மத்திய அரசுடன் பேச்சை துவங்கியுள்ளதாக,'வோடபோன் ஐடியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அக்சயா மூந்த்ரா கூறியதாவது:ஏ.ஜி.ஆர்., எனப்படும் மொத்த வருவாய் கணக்கீடு தொடர்பாக, நிறுவனம் தொடர்ந்த சீராய்வு மனுவுக்கு உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு அளிக்கவில்லை. எனினும், நிறுவனத்தின் நீண்ட கால வர்த்தக திட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. நிறுவனத்தின் நிதி நிலையை கருதி, இந்த பிரச்னைக்கான தீர்வுகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சை துவங்கியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புதான் இறுதியானது என்பதால், மொத்த வருவாய் கணக்கீட்டில் நிறுவனம் செலுத்த வேண்டிய பாக்கி தொடர்பான விவகாரம், இனி மத்திய அரசின் கையில் தான் உள்ளது. இதுகுறித்த விபரங்களை மத்திய அரசிடம் தெரிவித்து வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ