உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  சூலுார் செமிகண்டக்டர் பூங்காவில் பொது வசதி மையம் இடம்பெறும்

 சூலுார் செமிகண்டக்டர் பூங்காவில் பொது வசதி மையம் இடம்பெறும்

கோவை: கோவை, சூலுாரில் செமிகண்டக்டர் தொழிற்சாலை, எலக்ட்ரானிக் பூங்கா அமைக்க டிட்கோ திட்டமிட்டுள்ள நிலையில், அதில் ஒரு நிறுவனம், 250 கோடி ரூபாயில் தொழிற்சாலை அமைக்கிறது. தொழிற்பூங்காவில் இடம் பெறும் தொழிற்சாலைகள், பொருட்களை தயாரிக்க பொது வசதி மையம் ஒன்றையும் டிட்கோ ஏற்படுத்தவுள்ளது. இந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் எலக்ட்ரானிக், செமிகண்டக்டர் பொருட்களுக்கு பெருமளவில் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சில நிறுவனங்கள் மட்டுமே செமிகண்டக்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. செமிகண்டக்டர்களை தைவான், சீனா போன்ற நாடுகளிலிருந்து பெரும்பாலான நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. எனவே, தமிழகத்தில் இத்தகைய தொழிற்சாலையை, பெரியளவில் உருவாக்க டிட்கோ முயற்சிக்கிறது. கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்த, டிஎன் ரைசிங் கருத்தரங்கில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கோவையை சேர்ந்த 'ஜெப்டோ லாஜிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், செமிகண்டக்டர், எலக்ட்ரானிக் தொழிற்சாலை அமைக்க 250 கோடி ரூபாயில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பூங்காவில் பணிகள் செமிகண்டக்டர் பூங்காவில், சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் உற்பத்தி திறனை மேம்படுத்த பயிற்சி அளித்தல், ஆராய்ச்சி, உதவி மையங்களை அமைத்தல், எதிர்காலத்தில் செமிகண்டக்டர் உற்பத்திக்கு வழி வகுத்தல், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் பணிகள் நடைபெறும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை