உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அழகு சாதன பொருள் துறை பொலிவு பெற தனி கண்காணிப்பு அமைப்பு வேண்டும்

அழகு சாதன பொருள் துறை பொலிவு பெற தனி கண்காணிப்பு அமைப்பு வேண்டும்

புதுடில்லி:அழகு சாதன பொருட்கள் துறைக்கு தனியாக, சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்துமாறு மத்திய அரசை அத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.அழகு சாதன பொருட்கள் துறைக்கான கொள்கைகள் குறித்த வட்டமேஜை கலந்துரையாடலில் அத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூறியதாவது:மருந்து துறையுடன் சேர்த்து அழகு சாதன பொருட்கள் துறைக்கான கண்காணிப்பை, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. மருந்து துறையிடம் இருந்து அழகு சாதன பொருட்கள் துறையை பிரித்து, சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.ஏற்கனவே இத்துறையில் நுகர்வோர் நலன், புதுமை கண்டுபிடிப்பு, விலைக்கட்டுப்பாடு ஆகியவற்றில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது. எனினும், அழகு சாதன பொருட்களுக்கு தேவை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.எனவே, இத்துறை சார்ந்த உயர்கல்வி முடித்து, பலரும் அழகு சாதனங்களை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகின்றனர். இவற்றில் தவறு நேர்ந்து, வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்க, சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம். அதற்கு, சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும். அழகு சாதன பொருட்கள் தயாரிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறையிலும் சீர்திருத்தங்கள் தேவை. தற்போதுள்ள ஒப்புதல் நடைமுறையால், புதுமை கண்டுபிடிப்புகள் தாமதம் ஆகின்றன. இதைத் தவிர்க்க, தயாரிப்புக்கு முந்தைய ஒப்புதல் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அழகு சாதன பொருள் தயாரிப்பு முன்னணி நிறுவனமான மாரிக்கோ லிமிடெட், தலைமை சட்ட அதிகாரி அமித் பாசின் கூறுகையில், மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்புக்கு ஒரே மாதிரியான விதிகள் மிகப்பெரிய தடைக்கல். நவீனமயமான, துறைரீதியான புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டால், உற்பத்தி அதிகரித்து உள்நாட்டு அழகு சாதன பொருட்கள் துறை பொலிவு பெறும் என்றார். 2023 டிச., நிலவரப்படி, இந்திய அழகு சாதன பொருள் சந்தை மதிப்பு ரூ.70,000 கோடி அதிகரித்துள்ள மக்களின் ஆர்வம், வருவாய் உயர்வால், அழகு சாதன பொருட்களின் தேவை உயர்வு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி