உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மிகப்பெரிய பேட்டரி சேமிப்பகம் அமைக்கிறது அதானி நிறுவனம்

மிகப்பெரிய பேட்டரி சேமிப்பகம் அமைக்கிறது அதானி நிறுவனம்

புதுடில்லி: அதானி குழுமம், நாட்டிலேயே மிகப் பெரிய பேட்டரி மின்னாற்றல் சேமிப்பகத்தை உருவாக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. குஜராத்தின் கவ்டா என்ற இடத்தில் 1,126 மெகாவாட் என்ற அளவில் இது மின்சாரத்தை சேமிக்கும் அமைப்பாக உருவாக்கப்பட இருக்கிறது. அதாவது இங்கு, 700க்கும் மேற்பட்ட லித்தியம் அயன் பேட்டரிகளில் 1,126 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டு, அதனை மூன்று மணி நேரம் சப்ளை செய்ய முடியும். கவ்டா புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் வளாகத்தின் ஒரு பகுதியாக அமைய இருக்கும் இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் என்று அக்குழுமம் தெரிவித்திருக்கிறது. உலக அளவில் ஒரே இடத்தில் அமையும் மிகப்பெரிய பேட்டரி மின்சார சேமிப்பு அமைப்புகளில் இது ஒன்றாக இருக்கும். இதுகுறித்து பேசிய அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, “புதுப்பிக்கத்தக்க எரியாற்றலுடன் இயங்கும் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டுமென்றால் எரிசக்தியை சேமிப்பதும் அவசியம். “எனவேதான் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு, நீடித்த வளர்ச்சி எனும் இந்தியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இதனை உருவாக்குகிறோம். இதன்மூலம் நம்பகமான, சூழலுக்கு உகந்த, கட்டுபடியாகக்கூடிய எரிசக்தி பெரிய அளவில் கிடைக்கும், ” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை