மேலும் செய்திகள்
83 பயணியருடன் இலங்கை சென்றது 'சிவகங்கை' கப்பல்
23-Feb-2025
புதுடில்லி:இந்தியாவும், சிங்கப்பூரும் பசுமை மற்றும் டிஜிட்டல் கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் கடல்சார் வார விழாவில், இரு நாட்டு அமைச்சர்களின் முன்னிலையில், இது கையெழுத்தானது.ஜி.டி.எஸ்.சி., என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த கப்பல் வழித்தடம் அமைப்பதில், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த கப்பல் போக்குவரத்து பாதை, இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தி, பூஜ்ஜிய பசுமை இல்ல வாயு உமிழ்வு தொழில்நுட்பங்களின் வளர்ச்சியையும் பயன்பாட்டையும் துரிதப்படுத்தவும், டிஜிட்டல் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23-Feb-2025