உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.10,000 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம்

ரூ.10,000 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் இறுதிக்கட்ட முடிவுகளில் ஒன்றாக, இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பனை செய்வது தொடர்பான கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்தி, தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களைத் தடுக்கும் திறனை வலுப்படுத்தும் என்று, அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை உபகரணங்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றையும் இந்தியா வாங்க இருக்கிறது. இதற்கான முக்கிய ஒப்பந்ததாரராக 'லாக்ஹீட் மார்ட்டின் ரோட்டரி மற்றும் மிஷன் சிஸ்டம்ஸ்' செயல்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karutthu kandhasamy
டிச 04, 2024 21:59

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை எந்தவேண்டும் வெளிநாட்டில் ??? நம்மிடம் உள்ள தொழில் நுட்பங்களை கொண்டு அந்த ஹெலிகாப்டரை நமே தயாரிக்கலாமே நம் அப்துல்கலாம் அய்யா தேவையான தொழில் நுட்பங்களை நமக்கு வழங்கி உள்ளார் அதைக்கொண்டு நாம் உற்பத்தியை தொடங்கலாம் ஏன் கையை எந்தவேண்டும் அமெரிக்கரிடம் .அதுவும் டொனால்ட் டிரம்ப் நம்மிடம் அவ்வளவு சுமுகமாக இருக்க மாட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை