மேலும் செய்திகள்
கே.ஐ.டி., கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
01-Aug-2025
சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், 'மஹிந்திரா வேர்ல்டு சிட்டி'யில், 700 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க, 'ஹிகோகி' நிறுவனம், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, 'கோகி ஹோல்டிங்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா' நிறுவனம், மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் உள்ள தொழில் பூங்காவில் முதலீடு செய்ய, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் ராஜா, தலைமை செயலர் முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண் ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரூ.700 கோடி முதலீடு செய்ய, ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம் ஹிகோகியின் ஆலையால் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு
01-Aug-2025