உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வஜ்ரா துப்பாக்கிகள் வாங்க எல் அண்டு டி., உடன் ஒப்பந்தம்

வஜ்ரா துப்பாக்கிகள் வாங்க எல் அண்டு டி., உடன் ஒப்பந்தம்

புதுடில்லி:பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 'வஜ்ரா' துப்பாக்கிகளை தயாரித்து வழங்க, லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துடன் 7,628 கோடி ரூபாய்க்கு, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.நீண்ட துாரம் சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட, தானியங்கி 'கே 9 வஜ்ரா-டி' ரக அதிநவீன துப்பாக்கிகள், பீரங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி, 100 துப்பாக்கிகளை எல் அண்டு டி., நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது. தென்கொரிய நிறுவனமான ஹன்வா டெக்வினின் தொழில்நுட்ப பரிமாற்றத்துடன், உள்நாட்டிலேயே இவ்வகை துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. குஜராத்தின் சூரத் புறநகரில், எல் அண்டு டி.,யின் ஹசிரா ஆலையில் இந்த துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். ஏற்கனவே, இவ்வகையைச் சேர்ந்த 100 துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திடம் பயன்பாட்டில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை