ஐவுளித்துறை பி.எல்.ஐ., திட்டம் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு
புதுடில்லி:ஐவுளித்துறை நிறுவனங்கள், உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிக்க வசதியாக, போர்ட்டல் வசதி மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய ஐவுளித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள ஜவுளித் துறை நிறுவனங்கள், மேன் மேடு பைபர் எனப்படும், எம்.எம்.எப்., அப்பேரல், எம்.எம்.எப்., பேப்ரிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப ஐவுளி தயாரிப்பு பிரிவுகளில், வரும் 31ம் தேதி வரை போர்ட்டல் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, இந்த திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகள், புதிய விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆர்வமுள்ள நிறுவனங்கள், உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு, திட்டத்தின் நன்மைகளை பெற, குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர். ஜவுளித் துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து, புதிய நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.