உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டேட்டா சென்டர் ஆகாஷ் கோரிக்கை

டேட்டா சென்டர் ஆகாஷ் கோரிக்கை

புதுடில்லி:இந்திய தரவு மையக் கொள்கையை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென, 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத் தலைவர் ஆகாஷ் அம்பானி வலியுறுத்தியுள்ளார்.டில்லியில், இந்திய மொபைல் கான்பரன்சில் அவர் கூறியதாவது:இந்தியர்களின் தரவுகள், இந்தியாவில் உள்ள தரவு மையங்களில் தான் இருக்க வேண்டும். இதை உறுதிசெய்ய, 2020ம் ஆண்டின் தரவு மையக் கொள்கையை தற்போதைய சூழலுக்கு ஏற்ப, 'அப்டேட்' செய்ய அரசு முன்வர வேண்டும்.இதுவரை, 2ஜி தொழில்நுட்பத்தில் தவழ்ந்து கொண்டிருந்த இந்தியா, தற்போது 5ஜி என்ற நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து, 6ஜி தொழில்நுட்பத்திலும் நம்நாடு புதிய சாதனை படைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ